V4UMEDIA
HomeUncategorized'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் பாடல் காணொளிகள் வெளியானது!

‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் பாடல் காணொளிகள் வெளியானது!

பாரம்பரிய மிக்க தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G.தியாகராஜன் அவர்கள் தயாரிப்பில்,‘ராக்கி’  மற்றும் ‘சாணி காயிதம்’ புகழ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாகவும், பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் நடித்த ‘கேப்டன் மில்லர்’ பொங்கலை ஒட்டி 12/01/2024-அன்று வெளியானது.

பொங்கலுக்கு  வெளிவந்து  வெற்றி அடைந்த இத்திரைப்படத்திலிருந்து மூன்று பாடல்களின் காணொளி வெளியாகி உள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நான்கு அழகான பாடல்களும் ஒரு தீம் பாடலும் அமைந்துள்ளன. அதில்  மூன்று பாடல்களின் காணொளிகள் தற்போது அந்த படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியுள்ள ‘சரிகம தமிழ்’ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

படத்திலிருந்து ‘கொம்பாரி வேட்டை புலி’ பாடல் பிப்ரவரி 5-ஆம் தேதியும், மிகவும் முக்கியமான ‘கோர நாறு’ பாடல் பிப்ரவரி 6-ஆம் தேதியும், தீம் பாட லான ‘ரைஸ் ஆஃப்  மில்லர்’ பிப்ரவரி 7-ஆம் தேதியும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘கோர நாறு’ பாடல் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும் ‘கொம்பாரி வேட்டை புலி’ பாடல் ஒரு லட்சத்து மேற்பட்ட பார்வைகளையும் கடந்துள்ளது.

Most Popular

Recent Comments