V4UMEDIA
HomeNewsKollywood#STR48 படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!

#STR48 படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!

‘உலகநாயகன்’கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘கண்ணம் கண்ணும் கொள்ளையடித்தால்’ புகழ் தேசிங்கு பெரியசாமி அவர்களின் இயக்கத்தில் STR என்கிற ‘ஆத்மன்’ சிலம்பரசன் அவர்கள் கதாநாயகனாக நடிக்கும் STR48 என்ற திரைப்படத்தின் முதல் தோற்றம், இன்று அவரது 40-வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதை ஒட்டி, படத்தின் தயாரிப்பாளர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களே சிலம்பரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி நேற்று வெளியிட்டார்.

இது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 56 -வது தயாரிப்பாகும். இந்த திரைப்படம் ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது. இந்த திரைப்படத்தில் இரு வேறு காலகட்டங்களை சேர்ந்த நிகழ்வுகள் திரைக்கதையாக இருக்கும் என்பது முதல் தோற்றத்தின் மூலமாக தெரிய வருகிறது.

இந்த STR48 திரைப்படத்திற்கான அறிவிப்பு சென்ற வருடம் மார்ச் 9ஆம் தேதியே ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்தப் படத்துக்கான முன்னறிவிப்பு வந்து ஓராண்டுகளை கடந்தும் கூட இந்த படத்தில் காண எதிர்பார்ப்பு குறையவில்லை.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.இந்த படத்தின் நடிகர்,நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய அறிவிப்பு கூடிய விரைவில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியாகும்.

Most Popular

Recent Comments