V4UMEDIA
HomeNewsKollywood#DNS படப்பிடிப்பில் இணைந்தார் 'கிங்' நாகார்ஜுனா!

#DNS படப்பிடிப்பில் இணைந்தார் ‘கிங்’ நாகார்ஜுனா!

‘கிங்’ நாகார்ஜுனா அவர்கள் தனுஷ், சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் கூட்டணியில் உருவாகும் #DNS படப்பிடிப்பில் இணைந்தார்.

இந்திய சினிமாவின் இரண்டு பெரிய நட்சத்திரங்கள் – தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் மற்றும் ‘கிங்’ நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோருடன் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா சேர்ந்து உருவாக்கும் பெருமைக்குரிய படைப்பின் வழக்கமான படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியது. தனுஷ் நடிக்கும் வசனக் காட்சிகள் நிறைந்த பாகத்தை படமாக்கி படக்குழு தயாரிப்பு பணிகளை தொடங்கியது. அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி (ஏசியன் குரூப்) என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ஸ்ரீ நாராயண் தாஸ்.K.நரங்கின் ஆசியுடன் சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் இப்படத்தை தயாரிக்கின்றனர். சோனாலி நரங் படத்தை வழங்குகிறார்.

‘கிங்’ நாகார்ஜுனா அக்கினேனி அவர்கள் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிக்க படக்குழுவுடன் இணைந்தார். படப்பிடிப்பில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. இந்த இரண்டு நட்சத்திரங்களும் திரையை பகிர்ந்து கொள்வதைப் பார்ப்பது அவர்களின் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும். வெற்றிகரமான கதையை தயாரித்த சேகர் கம்முலா தனுஷ் மற்றும் நாகார்ஜுனாவை அழுத்தமான வேடங்களில் திரையில் காண்பிக்க உள்ளார்.

படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். ராமகிருஷ்ணா சபானி மற்றும் மோனிகா நிகோத்ரே தயாரிப்பு வடிவமைப்பை கவனிக்கிறார்கள்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், சிறப்பான தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப தரங்களுடன் பிரமாண்டமாக உருவாக்கப் படுகிறது.

Most Popular

Recent Comments