V4UMEDIA
HomeNewsKollywood'லால் சலாம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டின் இடம் மற்றும் தேதி அறிவிப்பு!

‘லால் சலாம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டின் இடம் மற்றும் தேதி அறிவிப்பு!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் அவர்களின் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், பழம்பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில், இயக்குனர்-நடிகர் கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தை ரஜினிகாந்த் அவர்களின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவாளராகவும் பி.பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

படத்திற்கான முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிப்பு வந்தது, தவிர்க்க முடியாத சில காரணங்களால் பட வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டு பிப்ரவரி 9-ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது.

படத்தில் நிறைய நட்சத்திர பட்டாளமே உள்ளதால் படம் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் டீசர் கடந்த நவம்பர் மாதம் வெளியானது.இதுவரை படத்திலிருந்து 2-பாடல் வரி காணொளிகள் வெளியாகி உள்ளன.

‘இசைப் புயல்’ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசையில் அவையும் சிறப்பாக வந்துள்ளன.அந்த பாடல்களின் காட்சி பதிவுகளும் மிக அருமையாக உள்ளன.படத்தின் முதல் பாடல்வரிக் காணொளி ‘தேர்த் திருவிழா’ வெளியாகி 20-லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைக் கடந்துள்ளது.

அதே போல படத்தின் இரண்டாவது பாடல்வரிக் காணொளி ‘ஏ புள்ள’ வெளியாகி 17-லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைக் கடந்துள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் ஜனவரி 26 அன்று சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மிகப் பிரமாண்டமாக படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற உள்ளது. படத்தின் அனைத்து பாடல்களும் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட உள்ளன.

இப்படத்தில் 1983-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக முதன்முதலாக கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் அவர்களும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். விளையாட்டில் அரசியலையும் மதத்தையும் கலக்கக் கூடாது என்பதைப் பற்றி படம் பேசுகிறது.

படம் பிப்ரவரி 9-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

Most Popular

Recent Comments