V4UMEDIA
HomeNewsKollywoodமீண்டும் இணையும் 'மாமன்னன்' கூட்டணி!

மீண்டும் இணையும் ‘மாமன்னன்’ கூட்டணி!

கடந்த ஆண்டு வெளியான ‘மாமன்னன்’  திரைப்படத்தின் வெற்றியின் மூலம் ‘வைகைப்புயல்’வடிவேலு திரை உலகில் மறு பிரவேசம் செய்தார். இப்படத்தில் அவருடன் ஃபஹத் ஃபாசில்,உதயநிதி,கீர்த்தி சுரேஷ், ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் கூட்டணி மீண்டும் இணைகிறது.சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் இருவரும் இரண்டாவது முறையாக இணையும் படத்திற்கு ‘மாரீசன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது.

சூப்பர்குட் ஃபிலிம்ஸ் சார்பில் திரு.ஆர்.பி.சவுத்ரியுடன் இணைந்து அவரது மகன்களும் நடிகர்களும் ஆன ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமாக உருவாகும் இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்குகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘ஆறு மனமே’ படத்தை இயக்கியிருந்தார். 2014-ம் ஆண்டு திலீப் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘வில்லாலி வீரன்’ படத்தை இயக்கியிருந்தார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கலைச்செல்வன் சிவாஜி  ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீஜித் சாரங் இப்படத்திற்கான படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

ஃபீனிக்ஸ் பிரபு சண்டைப் பயிற்சியாளராகவும் தினேஷ் மனோகரன் ஆடைவடிவைமைப்பாளராகவும் பணிபுரிகின்றனர். தற்போது ஃபஹத் ஃபாசில் அவர்கள் ‘சூப்பர் ஸ்டார்’ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

படம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Most Popular

Recent Comments