Home News ‘கல்கி 2898 ஏ.டி.’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை வித்தியாசமான முறையில் அறிவித்த படக்குழு!

‘கல்கி 2898 ஏ.டி.’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை வித்தியாசமான முறையில் அறிவித்த படக்குழு!

‘கல்கி 2898 ஏ.டி’ வெளியீட்டுத் தேதியை மே 9, 2024 என ஒரு தனித்துவமான நிகழ்வின் மூலம் வெளியிட்டதால், நாடு முழுவதும் உற்சாகம் உச்சத்தை எட்டியது.

சினிமாவின் பிரம்மாண்டமாக படைப்புகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்படும் ‘கல்கி 2898 ஏ.டி., தொலைநோக்கு பார்வையுடைய இயக்குனரான நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகவுள்ளது. அதன் வெளியீட்டுத் தேதியின் பிரமாண்ட அறிவிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம், ஒரு அசாதாரண சினிமா அனுபவத்தை அளிக்கும் என்று படக்குழு உறுதியளிக்கிறது. வாரணாசி, மும்பை, டெல்லி, சண்டிகர், சென்னை, மதுரை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், குண்டூர், பீமாவரம், காஷ்மீர் மற்றும் விஜயவாடா உள்ளிட்ட இந்தியாவின் பல நகரங்களில் படத்தில் இடம்பெறும் ‘ரெய்டர்கள்’ என்ற கதாபாத்திரம் போன்ற உடையணிந்தவர்கள் மூலம் ‘கல்கி 2898 ஏடி’-யின் பிரமாண்ட வெளியீட்டு தேதி அறிவிப்பை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். இந்நிகழ்வின் போது, ​​ரெய்டர்கள் ஒன்றாக அணிவகுத்து, எதிர்பார்ப்பை உருவாக்கி, ஒரு தனித்துவமான மற்றும் அற்புதமான முறையில் அறிவிப்பு பதாகையை பிடித்து மே 9, 2024 என படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தனர்.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனரும் தயாரிப்பாளருமான சி. அஷ்வினி தத், குறிப்பிட்ட வெளியீட்டு தேதி அறிவிப்பு குறித்து தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்,“வைஜெயந்தி மூவிஸ் தனது 50 வது ஆண்டைக் குறிக்கும் நிலையில், எங்கள் சினிமா பயணத்தில் மே 9 இன் முக்கியத்துவம் தெளிவாகத் தெரியும். ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ முதல் விருது பெற்ற ‘மகாநடி’ மற்றும் ‘மகரிஷி’ வரை, இந்த தேதி நம் வரலாற்றில் தனி இடம் பெற்றுள்ளது. இப்போது, ​​அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோன் போன்ற திறமையான கலைஞர்களைக் கொண்ட ‘கல்கி 2898 AD’ வெளியீடு எங்களுக்கு ஒரு சிறப்பான தருணத்தைக் குறிக்கிறது மற்றும் நிறுவனத்தின் மைல்கல்லான 50 வது ஆண்டும் இணைந்திருப்பது, மேலும் நாங்கள் எங்கள் பயணத்தை வைஜெயந்தி மூவிஸில் தொடர, அதை இன்னும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது”. என்றார்.

இதற்கிடையில், ‘கல்கி 2898 ஏ.டி’ கடந்த ஆண்டு சான் டியாகோ காமிக்-கானில் அதன் புதிய அறிமுகத்திற்குப் பிறகு அதிர்வலைகளை உருவாக்கியது,உலகளாவிய பாராட்டையும் பெற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை அதன் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்க வைத்துள்ளது, மேலும் இத்திரைக்கதை அவர்களை சூழ்ச்சிகள் நிறைந்த எதிர்கால உலகிற்கு கொண்டு செல்வதாக உள்ளது.

நாக் அஷ்வின் இயக்கி, வைஜெயந்தி மூவீஸால் தயாரிக்கப்பட்ட ‘கல்கி 2898 ஏ.டி’ ஒரு பன்மொழித் திரைப்படமாகும், இது எதிர்காலத்தில் நடக்கும் புராணக்கதைகளால் ஈர்க்கப்பட்ட அறிவியல் புனைகதைகளைக் கொண்ட பிரம்மாண்ட படைப்பாகும்.