V4UMEDIA
HomeNewsBollywoodதைப்பொங்கலை முன்னிட்டு வெளிவந்துள்ள திரைப்படங்கள் ஒரு பார்வை!

தைப்பொங்கலை முன்னிட்டு வெளிவந்துள்ள திரைப்படங்கள் ஒரு பார்வை!

இந்த ஜனவரி-2024-ல் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு பல்வேறு மொழித் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. பன்முகத் தன்மை கொண்ட நமது நாட்டில் தைப்பொங்கலானது மகர சங்கராந்தி,பிஹு,லோஹ்ரி என பல்வேறு பெயர்களில் கொண்டாடப் படுகிறது. இந்த பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தமிழில் நான்கு படங்கள் வெளியாகியுள்ளன.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ‘நடிப்பு அசுரன்’ தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்(12/01/24)’ திரைப்படம் அதிரடியாக மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு திரைப்படமாக ‘அயலான்'(12/01/24) வெளியாகி உள்ளது.

அதே போல பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அருண்விஜய் நடிப்பில் சிலிர்ப்பூட்டும் கதையம்சத்துடன் தைப்பொங்கலை முன்னிட்டு மிஷன் சாப்டர்-1(அச்சம் என்பது இல்லையே)(12/01/24) வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜெயராமின் நடிப்பில் ‘ஆபிரகாம் ஆஸ்லர்(11/01/24)’ திரைப்படம் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ளது.

அதே போல தெலுங்கில் ‘நா சாமி ரங்கா(14/01/24)’,’சைந்தவ்(13/01/24)’,
‘குண்டூர் காரம்(12/01/24)’ போன்ற திரைப்படங்களும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியாகி உள்ளன.

Most Popular

Recent Comments