நான்கு தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து பயணித்து, மாபெரும் வெற்றிப் படங்களைத் தந்த சத்ய ஜோதி ஃபிலிம்ஸ், T.G.தியாகராஜன் அவர்கள் தயாரிப்பில் தொடரி, பட்டாஸ்,மாறன் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக நடிகர் ‘தனுஷ்’ உடன் இணைந்து அளித்துள்ள பெருமைக்குரிய மாபெரும் படைப்பு கேப்டன் மில்லர் ஆகும்.

அருண் மாதேஸ்வரனின் மிரட்டலான இயக்கத்தில், ‘கேப்டன் மில்லர்’ பொங்கல் வெளியீடாக உலகமெங்கும் 900-த்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று வெளியானது.

ரசிகர்களின் பேராதவுடன் படம் நல்ல விமர்சனங்களையும் ‘தனுஷ்’ அவர்களின் அசுரத்தனமான நடிப்பிற்கும் பலத் தரப்பிலிருந்தும் பாரட்டுக்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறது.

படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாதிரங்களின் நடிப்பும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது என்றும், ‘தனுஷ்’ அவர்களின் சினிமா படவரிசையில் இதுவும் முக்கியமான படமாக அமையும் என்றும் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
















