V4UMEDIA
HomeNewsKollywoodபிப்ரவரி 9-இல் வெளியாகிறது 'லால் சலாம்'!

பிப்ரவரி 9-இல் வெளியாகிறது ‘லால் சலாம்’!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில்,’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க,விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்க, ஒரு சிறப்புத் தோற்றத்தில் 1983-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு உலகக் கோப்பையை முதன் முதலில் வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார்.

படத்துக்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது. இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.


லைகா நிறுவனத்தின் ‘மிஷன் சாப்டர்-I’ படம் 12/01/2024-அன்று பொங்கலை ஒட்டி வெளியாவதால், அதே நிறுவனம் தயாரித்துள்ள ‘லால் சலாம்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, தற்போது இப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 09/02/2024-அன்று படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே படத்தின் முதல் பாடல் வரிக் காணொளியான(Lyric Video) ‘தேர்த் திருவிழா’ 20-லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைக் கடந்துள்ளது.

Most Popular

Recent Comments