சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G.தியாகராஜன் அவர்கள் தயாரிப்பில்,அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் ‘தனுஷ்’ கதாநாயகனாக நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ பொங்கல் வெளியீடாக 12/01/2024-அன்று வெளியாவதை ஒட்டி, படத்தை விளம்பரப் படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
சமீபத்தில் பாடல் வரி காணொளிகள்(Lyric Videos) தொடர்ச்சியாக வெளிவந்தன. பின்னர் பட வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி(Pre release event) கடந்த 03/01/2024-அன்று நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதனிடையே 06/01/24-கடந்த சனிக்கிழமை படத்தின் அதிரடியான முன்னோட்டம் வெளியானது.
இரண்டு நிமிடம் ஐம்பத்து நான்கு வினாடிகள் ஓடும் முன்னோட்டம், சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் நடந்த ஒரு சம்பவத்தை காட்சிப் படுத்துகிறது. தனுஷ் கொள்ளைக்காரனா, சிப்பாயா அல்லது போராளிகளின் காவலனா? என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன. முன்னோட்டம் தேர்ந்த நடிகரின் பல அம்சங்களைக் காட்டுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த இந்தியாவை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த கதைக்களத்தின் திரை முன்னோட்டம், படிப்படியாக கண்முன்னே விரியும் பயங்கரமான சண்டைக் காட்சிகள் மூலம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
முன்னோட்டத்தில் தனுஷ் சில அதிரடியான சண்டைக் காட்சிகளை நிகழ்த்துவதைக் காணலாம். அவர் தனது கிராமத்தையும் அதன் சுரங்கத்தையும் மீட்க ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடுவதைக் காணலாம். ஆனால் முன்னோட்டம் ஒரு திருப்பத்துடன் முடிகிறது. ஒரு சில காட்சிகள் ஒரு காலத்தில் தனுஷ் ஆங்கிலேயர்களின் கீழ் ராணுவ வீரராக பணியாற்றியதைக் காட்டுகிறது. அவர் கேப்டன் மில்லர் என்று அழைக்கப்படுகிறார்.
ஒட்டு மொத்தமாக திரைப்படத்தில் நமக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது,12/01/2024-வரை காத்திருப்போம்.இதனிடையே படத்தின் முன்னோட்டம் 68-லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.
மேலும் படத்தின் நான்காவது பாடல்வரி காணொளி(Lyric Video) இன்று வெளியாகிறது.