V4UMEDIA
HomeNewsKollywoodநடிகர் 'தனுஷ்' அவர்கள் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் பட வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி(Pre release...

நடிகர் ‘தனுஷ்’ அவர்கள் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் பட வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி(Pre release event) இன்று நடைபெறுகிறது.

மாபெரும் இளைஞர் பட்டாளத்தை ரசிகர்களாகக் கொண்டுள்ள நடிகர் ‘தனுஷ்’ அவர்கள் நடிகர்,பாடகர்,பாடலாசிரியர்,தயாரிப்பாளர்,இயக்குனர் என பன்முகம் கொண்டவர். ஹாலிவுட்,பாலிவுட் என தனது வெற்றிக் கொடியை நாட்டிக் கொண்டிருக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G.தியாகராஜன் அவர்கள் தயாரிப்பில், ராக்கி, சாணி காயிதம் போன்ற தலைசிறந்த படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்தவரான இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் ‘தனுஷ்’ அவர்கள் கதாநாயகனாக நடிக்கும் அவரது 49-வது படமான ‘கேப்டன் மில்லர்’ தமிழர் திருநாளான தைப்பொங்கல் வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது.

படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவராஜ்குமார்,ப்ரியங்கா மோகன்,சந்தீப் கிஷன்,வினோத் கிஷன்,அதிதி பாலன்,நிவேதிதா சதீஷ்,ஜான் கொக்கேன்,விஜி சந்திரசேகர்,இளங்கோ குமாரவேல்,ஜெயபிரகாஷ்,போஸ் வெங்கட் மற்றும் காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார், சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கான வசனத்தை மதன் கார்க்கியும், படத்தொகுப்பை நாகூரானும், கலை இயக்கத்தை T. ராமலிங்கமும், சண்டைப் பயிற்சியை திலீப் சுப்பராயனும், நடன இயக்கத்தை பாஸ்கரும், ஆடை வடிவமைப்பை பூர்ணிமா ராமசாமி மற்றும் காவ்யா ஸ்ரீராமும் மேற்கொண்டுள்ளனர்.

படத்தின் முதல் பாடல்வரிகள் காணொளி(Lyric Video) 22/11/2023 அன்றும், இரண்டாவது பாடல்வரிகள் காணொளி(Lyric Video) 23/12/2023 அன்றும், மூன்றாவது பாடல்வரிகள் காணொளி(Lyric Video) 02/01/2023 நேற்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப் பட்டுள்ளது.

பட வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி(Pre release event) இன்று(03/01/2023) நேரு உள் விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.


‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் 12/01/2024 அன்று பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.

Most Popular

Recent Comments