V4UMEDIA
HomeNewsKollywoodநடிகர் 'தனுஷ்' அவர்கள் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது திரைப்படத்திற்கு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'...

நடிகர் ‘தனுஷ்’ அவர்கள் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது திரைப்படத்திற்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என பெயர் வைக்கப் பட்டுள்ளது.

மாபெரும் இளம் ரசிகர் கூட்டத்தை தன்னகத்தே கொண்டுள்ள நடிகர் ‘தனுஷ்’ அவர்கள் தனது இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே நடிகர்,பாடகர்,பாடலாசிரியர்,தயாரிப்பாளர்,இயக்குனர் என பன்முகம் கொண்ட நடிகர் ‘தனுஷ்’ அவர்கள், ஹாலிவுட்,பாலிவுட் என தன்னுடைய முத்திரையை பதித்தவர். அவரின் இயக்கத்தில் முதலாவதாக ‘ப.பாண்டி'(2017) ராஜ்கிரண்,ரேவதி,பிரசன்னா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றது.

தற்போது தனது நடிப்பில் 49-வது படமான ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துக் கொண்டே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பெயரிடப் படாத தனது 50-வது படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தார். தற்காலிகமாக D50 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தையும் அவரே எழுதி,இயக்கி, நடிக்கிறார்.

அடுத்தாக அவரது இயக்கத்தில் மூன்றாவது படத்தின் தலைப்பு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என வைக்கப் பட்டுள்ளது. பட அறிவிப்பு வீடியோ தனுஷ் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸி’ன் அதிகாரப் பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது.படத்தை அவரது தந்தை திரு. கஸ்தூரி ராஜா அவர்களும் அவரது தாயார் திருமதி.விஜயலஷ்மி கஸ்தூரி ராஜா அவர்களும் தயாரிக்கிறார்கள்.


இந்த திரைப் படத்தில் தனது உறவினர் பாவிஷ் அவர்களை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப் படுத்துகிறார். இவருடன் அனிகா சுரேந்திரன்,மேத்யூ தாமஸ்,ப்ரியா பிரகாஷ் வாரியர்,ரபியா,வெங்கடேஷ் மேனன்,ரம்யா ரங்கநாதன் மற்றும் பல முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்தத் திரைப் படத்தில் தனுஷின் ஆஸ்தான தொழில்நுட்ப கலைஞர்களே பணிபுரிகின்றனர்.

Most Popular

Recent Comments