V4UMEDIA
HomeNewsKollywoodரஜினி அறக்கட்டளை மற்றும் அகில இந்திய தலைமை ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சார்பில் நிவாரண...

ரஜினி அறக்கட்டளை மற்றும் அகில இந்திய தலைமை ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்க பட்டன.

சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி அறக்கட்டளை மற்றும் அகில இந்திய தலைமை ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோரும் சேர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்ஜாம்(MiChaung) புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மளிகை,பாய்,போர்வை போன்ற பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஆகியவை நிவாரணமாக வழங்கினர்.

இதனை அறக்கட்டளை சேர்ந்தோரும் மன்ற நிர்வாகிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக சென்று சேர்கிறதா என்று உறுதி செய்தனர்.

அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற உள்ளூர் நிர்வாகிகளும் நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்தனர்.

மேலும் ‘சூப்பர் ஸ்டார்’ பிறந்தநாளை ஒட்டி பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Most Popular

Recent Comments