V4UMEDIA
HomeNewsKollywood'கலைப்புலி'எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ட்ரெயின்' படத்தின் படப்பிடிப்பு...

‘கலைப்புலி’எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் படப்பிடிப்பு இன்று  பூஜையுடன் தொடங்கியது.

சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுத்து மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்த்து உள்ளார். இந்தத் திரைப்படத்தை தமிழ்த் திரையுலகிற்கு மாபெரும் வெற்றி மற்றும் கொண்டாட கூடிய படங்களைக் கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் வி கிரியேஷன்ஸ் ‘கலைப்புலி.எஸ்.தாணு’ தயாரிக்கிறார்.

இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது, எனவே ‘ட்ரெயின் (Train)’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் விஜய் சேதுபதி நடிப்பில் 52-வது படமாகும். இத்திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார், மேலும் அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார். டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தில் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ்,பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது,கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், அஜய்ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தாமதமாக தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை V.மாயபாண்டி மேற்கொள்கிறார்.

‘ட்ரெயின் (Train)’ படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் திரு முரளி ராமசாமி, திரு ராதாகிருஷ்ணன், S கதிரேசன், தயாரிப்பாளர் அன்புச்செழியன், கல்யாணம் (Knack Studios) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Most Popular

Recent Comments