V4UMEDIA
HomeNewsபாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்குரல் கொடுக்கும் 'மும்தாஜ்'

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்குரல் கொடுக்கும் ‘மும்தாஜ்’

மத்திய கிழக்கு நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் ஒன்று இஸ்ரேல்‘. லெபனான்,சிரியா, ஜோர்டான்,எகிப்து போன்ற நாடுகள் இஸ்ரேல் நாட்டை சுற்றி எல்லைகளாக அமைந்துள்ளன.

இஸ்ரேல் 14/05/1948-அன்று பிரிட்டிஷ்காரர்களால் தனி நாடாக அறிவிக்கப் பட்டது. 1922-களிலயே யூதர்கள் உலகம் முழுவதும் துரத்தப்பட்டு கடைசியாக பாலஸ்தீனத்தில் குடியேற ஆரம்பித்தார்கள். அப்பொழுதிலிருந்து நூற்றாண்டு காலமாக இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

1987-ல் தனி பாலஸ்தீன நாடு கோரி ஹமாஸ் என்ற அமைப்பு உருவாகி இஸ்ரேலுக்கு எதிராக போராட ஆரம்பித்தது. இப்போராளிக் குழுவின் நடவடிக்கைகள் தீவிரமடைய ஆரம்பித்தனசமீபத்தில் இவர்கள் அக்டோபர் 7-ம் தேதி 5000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவினர். அதன் பிறகு இஸ்ரேல் இதனை போராக அறிவித்தது.

ஹமாஸ் இயக்கத்தினர் மீது கடும் தாக்குதலை தொடுத்தது. இதில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் 14,000-க்கும் மேற்பட்டோர் இதுவரை இறந்து போயுள்ளனர். 23/11/2023-முதல் நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருபுறமும் பணையக் கைதிகள் விடுவிக்கப் படுகிறார்கள்.

 இதனிடையே தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக விளங்கிய மும்தாஜ் அவர்கள் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அகதிகளுக்கும் ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் அவர்களுக்காக குரல் கொடுக்கும் விதமாகவும் சிறிய போராட்டத்தை முன்னெடுத்து அவர்களுக்காக தனது கோபத்தையும் ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளார்.

Most Popular

Recent Comments