Home News Kollywood யோகி பாபு அவர்கள் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வெளியீடு

யோகி பாபு அவர்கள் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வெளியீடு

சிறந்த நகைச்சுவை ஆற்றலாலும் குணச்சித்திர நடிப்பாலும் அனைத்து தரப்பு மக்களையும் ரசிகர்களாக ‘யோகி பாபு’ தன்வசம் கொண்டுள்ளார். 2023-ம் ஆண்டில் மட்டும் இதுவரை அவரது நடிப்பில் 20 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

தனது கடினமான உழைப்பால் உயர்ந்து 170-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ள அவர் கதாநாயகனாகவும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். மண்டேலா, பொம்மை நாயகி, லக்கி மேன் போன்ற திரைப்படங்கள் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

அந்த வகையில் அவர் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. RAACK புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் A S ரமண பாலாஜி- பத்மாவதி திவாகர் அவர்கள் தயாரிப்பில் ராஜவம்சம் திரைப்படத்திற்கு பிறகு அடுத்த படைப்பாக K V கதிர்வேலு அவர்கள் இயக்கத்தில் யோகி பாபு அவர்கள் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு ‘குருவிக்காரன்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி நடிகர்களும் அவருடன் இணைந்து நடிக்கின்றனர்.

படத்தில் சாம் C S இசையமைப்பாளராகவும் பிரசன்னா S குமார் ஒளிப்பதிவாளராகவும் குருராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.