தேசிய விருது பெற்ற தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ் அவர்கள், கேரளாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரள கிரிக்கெட் சங்கம் (KCA) தனது மகளிர் அணிக்கான விளம்பர தூதுவரை நியமித்த முதல் நிகழ்வாக இது அமைகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில், நவம்பர் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா T20I போட்டிக்கான இணையதள நுழைவுச்சீட்டு விற்பனையை கீர்த்தி சுரேஷ் வெகு விமரிசையாக தொடங்கி வைத்தார்.

மேலும் விழாவில் கலந்து கொண்ட கேரளாவைச் சேர்ந்தவரும் தேசிய அணியில் இடம்பெற்ற வீராங்கனையும் ஆன ‘மின்னு மணி‘யையும் கௌரவித்தார்.



உள்நாட்டுப் போட்டிகளில் அனைத்து வயதுப் பிரிவுகளிலும் முதல் தர மற்றும் சூப்பர் லீக் போன்ற போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றதற்காக அவர்களை வாழ்த்தினார். மேலும் 2017-18 ஆம் ஆண்டில் 23-வயதுக்குட்பட்ட பெண்கள் தேசிய T-20 சாம்பியன்ஷிப்பை வென்றது பற்றியும் கேட்டறிந்தார்.