யஷ் ராஜ் ஃபிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் திரைப்பட வரிசைப் படங்களான ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, வார் மற்றும் பதான் ஆகியவை மிகப்பெரிய வெற்றிப் படங்களாகும். அந்த வரிசையில் ஐந்தாவது படமாக வெளியாகி உள்ள டைகர்-3 தனது வசூல் சாதனையை பதிவு செய்து வருகிறது.
யஷ் ராஜ் பிலிம்ஸின் பிரம்மாண்டான தயாரிப்பில் மணீஷ் ஷர்மா இயக்கத்தில் சல்மான் கான் மற்றும் காத்ரினா இருவரின் அதிரடியான நடிப்பில் டைகர்-3 திரைப்படம் கடந்த தீபாவளியன்று (12/11/23) ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெளியானது. படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் அதிரடியான வசூல் சாதனையும் புரிந்து கொண்டிருக்கிறது. அதிரடியான சண்டை காட்சிகளும் நிறைந்துள்ளதால் அரங்கு நிறைந்த காட்சிகளாய் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்பை யுனிவர்ஸில் சல்மான் கான் நடிப்பில் வெளியான இதற்கு முந்தைய படங்களான ஏக் தா டைகர் ₹334.39 கோடியும் டைகர் ஜிந்தா ஹை ₹570 கோடியும் வசூலித்து சாதனை புரிந்துள்ளன.
அந்த வரிசையில் டைகர்-3-ம் உலகம் முழுவதும் முதல்நாள் வசூலாக ரூ.94 கோடியும் முதல் மூன்று நாள் வசூலாக ரூ.240 கோடியும் வசூலித்து சாதனை புரிந்து வருகிறது. சினிமா வர்த்தகர்கள் வட்டார கூற்றுப்படி முதல் 6 நாள் முடிவில் 327 கோடியை வசூலித்து இருப்பதாக தெரிகிறது.
Day 1 – 94cr
Day 2 – 86cr
Day 3 – 60cr
Day 4 – 32cr
Day 5 – 29cr
Day 6 – 26cr
Total – 327cr
கூடிய விரைவில் மிகப்பெரிய வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.