V4UMEDIA
HomeNews'அஜாக்ரதா’-ராதிகா குமாராசாமியின் முதல் தோற்றம் வெளியீடு

‘அஜாக்ரதா’-ராதிகா குமாராசாமியின் முதல் தோற்றம் வெளியீடு

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரொடக்சன்ஸ் தயாரிக்கும் பான் இந்திய படமான ‘அஜாக்ரதா’வில் ராதிகா குமாராசாமியின் முதல் தோற்றம் வெளியானது.

பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவியுமான குட்டி ராதிகா என அழைக்கப்படும் ராதிகா குமாரசாமி, கர்நாடாகவிலேயே சூப்பர் ஹிட் பட தயாரிப்பு நிறுவனம் என பெயரெடுத்த ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரொடக்சன்ஸ் தயாரிக்கும் ‘அஜாக்ரதா’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ரவிராஜ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை இயக்கவுள்ள இயக்குநர் சசிதர் மிக பிரமாண்டமாக உருவாக்க முடிவு செய்துள்ளார். அதற்கேற்றபடி மிகப்பெரிய அளவில் கலை அலங்காரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராதிகா குமாரசாமியின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் விதமாக ராதிகாவின் கதாபாத்திர முதல் தோற்றத்தை இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிவப்பு நிற பட்டுப்புடவையில் மிகுந்த ஆபரணங்களுடன் அதிரடியாக காட்சியளிக்கிறார் ராதிகா. அவர் பின்னால் பல தீபங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. அவருடைய பிறந்தநாளுக்கு மட்டுமல்லாமல் தீபாவளிக்கும் சேர்த்து இது ஒரு பொருத்தமான முதல் தோற்றம் வெளியீடு தான் .

‘தி ஷேடோஸ் பிஹைன்ட் தி கர்மா’ என்பதுதான் இந்தப்படத்தின் டேக்லைன். பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் இந்தப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடிக்க உள்ளார். விரைவில் அவரது பெயர் அறிவிக்கப்படும்.

ஆக்சன் த்ரில்லராக உருவாக உள்ள இந்தப்படத்தில் ஸ்ரேயாஸ் தல்பேட் முக்கியமான பங்களிப்பு கொடுத்திருக்கிறார். மேலும் சுனில், ராவ் ரமேஷ், ஆதித்யா மேனன், தேவராஜ், வினய் பிரசாத், ஷ்ரவன் மற்றும் பல தென்னிந்திய நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

Most Popular

Recent Comments