உன்னி முகுந்தன்-மஹிமா நம்பியார் இருவரும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஜெய் கணேஷ்’ திரைப்படம் பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் சங்கர் எழுத்து மற்றும் இயக்கத்தில் 2024 கோடை விடுமுறைக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
|ஜெய் கணேஷ்|ജയ് ഗണേഷ് |Jai Ganesh|जय गणेश| జై గణేష్ |ಜೈ ಗಣೇಶ್ | জয় গণেশ |
உன்னி முகுந்தனின் கதாபாத்திரம், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரையும் பிரதிபலிக்கும் வகையில் குடும்ப பொழுதுபோக்குப் படமாகவும் பரபரப்பான பின்னணியுடன், அவருக்கு அமைந்த மிகவும் சவாலான பாத்திரங்களில் ஒன்றாக இருக்கும். தற்போது தயாரிப்பில் உள்ள இப்படம், ரஞ்சித் சங்கரின் ட்ரீம்ஸ் & பியோண்ட் புரொடக்ஷன்ஸ் மற்றும் உன்னி முகுந்தன் பிலிம்ஸ் ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பாகும்.

மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார், ஜோமோல் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு குற்றவியல் வழக்கறிஞராக சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் ஹரிஷ் பேரடி, அசோகன், ரவீந்திர விஜய், நந்து உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
மாளிகாபுரம் படத்தை அடுத்து உன்னி நடிக்கும் ‘ஜெய் கணேஷ்’ மலையாளப் படத்தின் படப்பிடிப்பு எர்ணாகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படக்குழுவில் முன்னணி ஒளிப்பதிவாளர் சந்துரு செல்வராஜ், படத்தொகுப்பாளர் சங்கீத் பிரதாப், இசையமைப்பாளர் சங்கர் ஷர்மா மற்றும் பலர் உள்ளனர். இந்த நம்பிக்கைக்குரிய படைப்பிற்காக காத்திருங்கள்!
ஜெய்கணேஷ் படக்குழு :
எழுத்து மற்றும் இயக்கம்-ரஞ்சித் சங்கர்
தயாரிப்பு- யுஎம்எஃப் மற்றும் ட்ரீம்ஸ் என் பியோண்ட்
ஒளிப்பதிவு-சந்துரு செல்வராஜ்
படத்தொகுப்பு-சங்கீத் பிரதாப்
இசை – சங்கர் ஷர்மா
ஒலி வடிவம்-தபஸ் நாயக்
தயாரிப்பு வடிவமைப்பு – சூரஜ் குருவிலங்காடு
ஒப்பனை-ரோனக்ஸ் சேவியர்
உடைகள்-விபின் தாஸ்
நிர்வாகத் தயாரிப்பு – சஜீவ் சந்திரூர்
இணை இயக்கம்- அனூப் மோகன் S
டிஐ-லிஜு பிரபாகர்
விஎஃப்எக்ஸ்- DTM
ஸ்டில்ஸ்-நவீன் முரளி
வடிவமைப்பு-ஆண்டனி ஸ்டீஃபன்
வசன வரிகள்- ‘ஃபில் இன் த பிளாங்க்ஸ்’
விளம்பர ஆலோசகர்: விபின் குமார்
மக்கள் தொடர்பு : தேஜஸ்வி சஜ்ஜா