V4UMEDIA
HomeNewsராஜு யாதவ் திரைப்படத்தில் இருந்து 'ராஜு யாதவ் சூடு' என்ற பாடல் வெளியீடு

ராஜு யாதவ் திரைப்படத்தில் இருந்து ‘ராஜு யாதவ் சூடு’ என்ற பாடல் வெளியீடு

பிரபல இயக்குநர் பாபி ‘ராஜு யாதவ்’ திரைப்படத்திலிருந்து ‘ராஜு யாதவ் சூடு’ பாடலை வெளியிட்டார். இயக்கம்:கிருஷ்ணமாச்சாரி.கே, தயாரிப்பு:சாய் வருணவி கிரியேஷன்ஸ் மற்றும் கரிஸ்மா ட்ரீம்ஸ் என்டர்டெயின்மென்ட்.

சின்னத்திரை கமல்ஹாசன் என்று பிரபலமாக அறியப்படும் ஜபர்தஸ்த் புகழ் கெட்அப் ஸ்ரீனு, அறிமுக இயக்குனர் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமான ‘ராஜு யாதவ்’ வில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.  சாய் வருணவி கிரியேஷன்ஸ் மற்றும் கரிஸ்மா ட்ரீம்ஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் கே. பிரசாந்த் ரெட்டி மற்றும் ராஜேஷ் கல்லேபள்ளி இணைந்து இந்தத் திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் நல்ல வரவேற்பைப் பெற்றது, மேலும்  முதல் பாடலான ‘ ராஜு யாதவ் சூடு’வை படக்குழு வெளியிட்டு இசை பயணத்தை தொடங்கியுள்ளது. இயக்குனர் பாபி பாடலை வெளியீட்டு விழாவை சிறப்பித்தார்.

ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் ஒரு மயக்கும் மெலடி பாடலை வழங்கியுள்ளார், அதே நேரத்தில் ராம் மிரியாலா தனது அற்புதமான குரலால் பாடலை மேலும் மெருகேற்றியுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற பாடலாசிரியர் சந்திரபோஸின் பாடல் வரிகள் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

கதாநாயகன் தனது காதலை கதாநாயகியாக நடித்துள்ள ‘அங்கிதா காரத்’திடம் வெளிப்படுத்துவதை இந்த மெல்லிசை பாடல் காட்டுகிறது.  பாடல் காட்சிகள் மிகவும் அழகாக வந்துள்ளதால் மிக வேகமான வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் காதல், காமெடி தவிர, இதயத்தைத் தொடும் உணர்வுப் பூர்வமான காட்சிகளும் இருக்கின்றன. ‘ராஜு யாதவ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் முடிவடைந்துள்ளன. தயாரிப்பாளர்கள் விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிப்பார்கள்.

நடிகர் மற்றும் நடிகையர்:

‘கெட்அப் ஸ்ரீனு, அங்கிதா காரத், ஆனந்த சக்கரபாணி, ராக்கெட் ராகவா, மிர்ச்சி ஹேமந்த்,ஜபர்தஸ்த் சன்னி, சந்தோஷ் கல்வாச்சேர்லா, ஸ்ரீராம், கல்யாண் பூஷன்,ஸ்ரீமணி, பவன் ராஜேஷ்,உத்திர பிரசாத் மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

எழுத்து மற்றும் இயக்கம்:

கிருஷ்ணமாச்சாரி.கே

தயாரிப்பு: சாய் வருணவி கிரியேஷன்ஸ் மற்றும் கரிஸ்மா ட்ரீம்ஸ் என்டர்டெயின்மென்ட்

தயாரிப்பாளர்கள் : கே.பிரசாந்த் ரெட்டி மற்றும் ராஜேஷ் கல்லேபள்ளி

இசை: ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்

ஒளிப்பதிவு:சாய்ராம் உதய் D.F.Tech

பாடல்கள்: சந்திரபோஸ்,கசர்லா ஷ்யாம்

படத்தொகுப்பு : போந்தாலா நாகேஸ்வர ரெட்டி

தயாரிப்பு வடிவமைப்பு : ஸ்ரீ நாகேந்திர தங்கேலா

நிர்வாகத் தயாரிப்பு:  விப்லோவ்

பின்னணிப் பாடகர்கள்:

சந்திரபோஸ், ராம் மிரியாலா,ராகுல் சிப்லிகுன்ச், மாங்லி, யசஸ்வி  கொண்டேபுடி

நடன அமைப்பு : ஜித்து மாஸ்டர்

மக்கள் தொடர்பு: வம்சி – சேகர்

சமூக வலைத்தளம் : ஹேஷ் டேக் மீடியா

Most Popular

Recent Comments