இயக்குனராக இருந்து இயக்குனராக இருந்து நடிகர்களாக மாறியவர்களில் அமீரும் ஒருவர். யோகி, வடசென்னை உள்ளிட்ட படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அமீர் சமீப காலமாக ரெஸ்டாரன்ட் பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் கிழக்கு கடற்கரை சாலையில் 4 ஏஎம் என்கிற காபி ஷாப்பை தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து துவங்கினார் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் லா கபே என்கிற பெயரில் மீண்டும் ஒரு ரெஸ்டாரண்ட் ஒன்றை திறந்துள்ளார் அமீர்.
இதன் திறப்பு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டு இந்த ரெஸ்டாரண்டை துவக்கி வைத்தார். இந்த நிகழ்விற்கு விஜய்சேதுபதி வருகை தந்தபோது அவரது தோற்றத்தை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டனர். காரணம் 70 80களில் பார்த்த ஒரு விதமான கெட்டப்பில் விஜய் சேதுபதி இருந்தார்.
இது பற்றி விசாரித்தபோது கிடைத்த தகவலில் வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக தான் இந்த தோற்றத்தில் இருக்கிறாராம் விஜய்சேதுபதி. பெரும்பாலும் பல ஹீரோக்கள் தங்களது படம் வெளியாகும் வரை தங்களது கெட்டப்பை மறைக்க பலவிதமான முயற்சிகள் செய்வார்கள்.
ஆனால் இப்படி படத்தில் நடிக்கும் கெட்டப்புடன் பொதுவெளிக்கு வந்திருக்கிறீர்களே என கேட்டதற்கு, அமீர் எனக்கு ரொம்ப பிடித்தமானவர். இந்த திறப்பு விழாவுக்கு செல்ல என்னுடைய இயக்குனரிடம் அனுமதி கேட்டபோது இப்படி செல்வதால் ஒன்றும் பிரச்சனை இல்லை போய் வாருங்கள் என்று அனுமதி அளித்தார். அதன் பின்னரே இந்த தோற்றத்திலேயே வந்தேன் என்று கூறினார்.