இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்த அதிரடி படமாக உருவாகியுள்ளது. ஜிகர்தண்டா டபுளக்ஸ். பல வருடங்களுக்கு முன்பு அவரது இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாகத் தான் இது உருவாகிறது. இந்த படமும் கிட்டத்தட்ட முதல் பாகத்தை போன்ற அதே கதை பின்னணியில் சற்று வித்தியாசமான கோணத்தில் தயாராகியுள்ளது.
இதில் ராகவா லாரன்ஸும் சமீபகாலமாக மாநாடு, மார்க் ஆண்டனி என பட்டையை கிளப்பி வரும் எஸ்.ஜே சூர்யாவும் இணைந்து நடித்திருப்பதால் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக பேட்ட படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்கள் பெரிய வரவேற்பு பெறாத நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாக இருக்கும் இந்த படத்தின் தமிழக வெளியீடு உரிமையை தற்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இது குறித்த தகவலை மகிழ்ச்சியுடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.