கவுதம் மேனன் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, கடந்த பல வருடங்களாகவே அவர் இயக்கும் படங்கள் படப்பிடிப்பில் தாமதமாவது ஒரு பக்கம், பின்னர் படம் தயாராகி ரிலீஸுக்கு தாமதமாவது இன்னொரு பக்கம் என ஏதாவது பிரச்சனைகளை சந்தித்து தான் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் என்கிற படத்தை துவங்கினார் கவுதம் மேனன். இது ஏற்கனவே சூர்யாவுக்கு சொல்லப்பட்டு அதன்பின் சில காரணங்களால் கைவிடப்பட்ட படம் தான்.
ஒரு வழியாக படத்தை எடுத்து முடித்தாலும் இடையில் சில நாட்கள் படப்பிடிப்பு மீதி இருந்தது தன் பிறகு தடைகளை தகர்த்து படபிடிப்பையும் நடக்க முடித்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அனேகமாக வரும் டிசம்பரில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் பற்றி கவுதம் மேனன் கூறும்போது வழக்கமாக எனது படங்களில் காதலர்கள் உருகி உருகி காதலிப்பார்கள். ஆனால் இந்த படத்தில் காதலே வித்தியாசமாக காட்டப்பட்டிருக்கும். அது மட்டுமல்ல ஜெயிலர் படத்தில் மிரட்டிய நடிகர் விநாயகனையும் இதுவரை பார்த்திராதஒரு கதாபாத்திரத்தில் காட்டி இருக்கிறேன். அதுவும் நிச்சயம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்: என்று கூறியுள்ளார்.