என்னதான் பாஸ்ட்ஃபுட் கலாச்சாரத்தில், டெக்னாலஜி வளர்ச்சியில் ரசிகர்கள் ரசனை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு இருந்தாலும், நல்ல குடும்பக்கதை அம்சம் கொண்ட படங்களை கொடுத்தால் அதற்கும் நிச்சயம் ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு என்பதையும் பல சமயங்களில் ரசிகர்கள் நிரூபித்து வருகின்றனர்,
அப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான கடைக்குட்டி சிங்கம், சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற படங்களுக்கு மிகப்பெரிய வெற்றி பரிசாக கிடைத்தது. இந்த நிலையில் வீராயி மக்கள் என்கிற படம் தற்போது உருவாகி வருகிறது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கிராமத்து கதாபாத்திரங்களுக்கு என்றே பெயர் போன வேலா ராமமூர்த்தி மற்றும் மறைந்த நடிகர் மாரிமுத்து இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ஒரு பிரச்சனையால் 25 வருடங்களுக்கு முன்பு பிரிந்து போன குடும்பம் மீண்டும் ஒரு திருமணம் காரணமாக எப்படி ஒன்று சேர்கிறது. அதற்குள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், சந்தோஷங்கள் இவற்றை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது/
சமீபத்தில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மக்களின் மனதை உருக வைத்த மாயாண்டி குடும்பத்தார் படம் போல இதுவும் தரமான குடும்ப படமாக இருக்கும் என்பது நன்றாகவே தெரிகிறது.