V4UMEDIA
HomeNewsKollywoodலால் சலாம் படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்

லால் சலாம் படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்

தனுஷ் நடித்த 3, கவுதம் கார்த்தி நடித்த வை ராஜா வை ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் படம் லால் சலாம். இந்த படத்தில் கதாநாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் நடித்துள்ளனர்.

அதேசமயம் மொய்தீன் பாய் என்கிற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, கல்கத்தா, திருவண்ணாமலை, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக வெளியீடு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அனேகமாக பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Most Popular

Recent Comments