கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் வரை அந்த படம் குறித்தே ஒரே பேச்சாக இருந்தது. அந்த படம் வெளியான பிறகு அந்த வெற்றி பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டது. ஒரு வழியாக ஜெயிலர் ஜுரம் அடங்கி தற்போது விஜய் நடித்துள்ள லியோ ஜுரம் ஆரம்பித்துள்ளது.
காரணம் மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ஹிட் பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் மீண்டும் இந்த படத்தில் விஜய்யுடன் கைகோர்த்துள்ளார் என்பதுதான். திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்,
ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது, இந்த படத்திற்கு ஆடியோ லான்ச் நடைபெறாதது, ரசிகர் சிறப்புக் காட்சி நடித்த அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என்பது உள்ளிட்ட பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த படத்தின் பாடல்களை சீரான இடைவெளிகளில் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் வெளியான அன்பெனும் பாடல் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.
நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தது இது போன்ற புகைப்படங்களை பார்க்கத்தான். ஒரு குடும்ப பங்கான பின்னணியில் விஜய் திரிஷா. கவுதம் மேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் இருப்பதை இந்த புகைப்படங்களில் பார்க்க முடிகிறது, இந்த புகைப்படங்கள் படத்தின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கின்றன,