கடந்த 28 வருடங்களுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. லஞ்சத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரிய புரட்சியை இந்த படம் உண்டு பண்ணியது என்று சொல்லலாம். இந்த நிலையில் 28 வருடங்கள் கழித்து கமல், ஷங்கர் கூட்டணியில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன் 2 என்கிற பெயரில் தயாராகி வருகிறது.
இந்த படம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே துவங்கினாலும் இடையில் சில தடங்கல்களை சந்தித்து பின்னர் மீண்டும் வேகம் எடுத்து தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவு பெற்ற நிலையில் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் தற்போது கமல் இந்த படத்தில் தனக்கான காட்சிகளுக்கு டப்பிங் பேசும் பணியை துவங்கியுள்ளார். இயக்குனர் ஷங்கரும் கமலும் இந்த டப்பிங் பணியில் ஈடுபடும் வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.வரும் 2024 ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.