V4UMEDIA
HomeNewsKollywoodஜெயிலர் தந்தையை சந்தித்த போலீஸ் மகன்

ஜெயிலர் தந்தையை சந்தித்த போலீஸ் மகன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பெற்ற மிகப்பெரிய வெற்றியால் அந்த படத்தில் நடித்த பல நட்சத்திரங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பும் மிகப்பெரிய அடையாளமும் கிடைத்துள்ளது.

குறிப்பாக அந்தப் படத்தில் வில்லனாக நடித்த விநாயகன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளார். அதை தொடர்ந்து அந்த படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்த வசந்த் ரவியும் பிரபலமாகியுள்ளார்.

அவர் ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலர் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய உலகளாவிய வரவேற்பையும் அறிமுகத்தையும் கொடுத்துள்ளது. ரஜினிகாந்தின் மகன் என்கிற அடையாளத்துடன் ரசிகர்கள் அவருக்கான வரவேற்பை அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் தனக்கு இந்த அளவிற்கு ரசிகர்களிடம் மரியாதையும் அன்பையும் பெற்று தந்ததற்கு நன்றி செலுத்தும் விதமாகவும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 170 படத்திற்கு தனது வாழ்த்துக்களை சொல்லும் விதமாகவும் அவரை நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்று வந்துள்ளார் நடிகர் வசந்த் ரவி.

இது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

Most Popular

Recent Comments