Home News Kollywood தலைவர் 170 படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் கோலாகலமாக துவங்கியது  

தலைவர் 170 படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் கோலாகலமாக துவங்கியது  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றிப் படமாக மாறி பாக்ஸ் ஆபீசை அடித்து நொறுக்கியது. 600 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக அளவில் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்கிற பெருமையையும் அது பெற்றது.

இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தப் படம் இன்னும் சில மாதங்களில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க ஜெய்பீம் இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கும் படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. தலைவர் 170 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உற்சாகப்படுத்தின.

குறிப்பாக 32 வருடங்களுக்குப் பிறகு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

அதேபோல நடிகர்கள் பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துசாரா விஜயன், ரித்திகா சிங் என பல முன்னணி நட்சத்திரங்களும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்,

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது, அதற்கு முன்னதாக படத்தில் துவக்க விழா பூஜை நடைபெற்றது, இந்த பூஜையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் நடிகை மஞ்சு வாரியர், ரக்சன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திர கூட்டணியை பார்க்கும்போது இயக்குனர் டிஜே ஞானவேல் இதை ஒரு பிரம்மாண்டமான படமாக உருவாக்குகிறார் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.