நடிகர் சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் சித்தா திரைப்படம் வெளியானது. ஒரு சித்தப்பா என்பவரின் பங்களிப்பு ஒரு குழந்தைக்கு என்னவாக இருக்கிறது என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. உணர்வு பூர்வமாக உருவாகி இருந்த இந்த படம் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இந்த படத்தை மிக நேர்த்தியாக இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக நடித்த சித்தார்த் இதுதான் தனது முதல் படம் என்று சொல்லும் அளவிற்கு இந்த படத்தை பற்றி செல்லும் இடங்களில் எல்லாம் சிலாகித்து பேசி வருகிறார்.
அந்த அளவிற்கு இந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்து இருந்தார் சித்தார்த். இந்த படமும் அவரது நம்பிக்கையை காப்பாற்றி உள்ளது. படத்திற்கு ரசிகர்களிடம் மட்டுமல்லாது பிரபலங்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் இந்த படத்தை பார்த்த நடிகர் சிலம்பரசன் சித்தா படக்குழுவினருக்கும் நடிகர் சித்தார்த்திற்கும் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியேற்றுள்ள பதிவில் இந்த படம் ரொம்பவே ஒரு சென்சிட்டிவான சப்ஜெக்ட். இதை அழகாக முறையில் ரொம்பவே தெளிவாக கையாண்டுள்ளார் இயக்குனர் அருண்குமார். அவருக்கு எனது பாராட்டுக்கள். அதுமட்டுமல்ல அழகான ஸ்கிரிப்ட் தேர்வு செய்து அதை தயாரிக்கும் சித்தார்த்திற்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என்று கூறியுள்ளார் நடிகர் சிலம்பரசன்.