சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005இல் வெளியான சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது உலகமே அறிந்த ஒன்று. இந்த நிலையில் 15 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் சந்திரமுகி 2 என்கிற பெயரில் உருவாகியுள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி.வாசுவே இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த இரண்டாம் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவில்லை என முடிவானதும் அவருக்கு பதிலாக அதில் நடிக்க பொருத்தமான நபர் யார் என தேடியபோது அவரது சிஷ்யரான ராகவா லாரன்ஸை விட வேறு ஒருவர் பொருத்தமாக இருக்க முடியுமா என்ன ?
அந்த வகையில் லாரன்ஸ் நடிப்பில் தற்போது படம் உருவாகி வரும் செப்டம்பர் 28ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாக இருக்கிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானதுமே படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்று விட்டு தான் படத்தில் நடிக்கவே சென்றார் லாரன்ஸ்.
இந்த நிலையில் தற்போது படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதால் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து அவரது ஆசீர்வாதத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளார் ராகவா லாரன்ஸ்.