தரமான படங்களை மட்டுமே தயாரிப்பது என்கிற குறிகோளுடன் செயல்பட்டு வரும் தயாரிப்பு நிறுவனம் தான் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ். இதற்கு முன்னதாக மாயா, மாநகரம், மான்ஸ்டர், டாணாக்காரன் உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்த இந்த நிறுவனம் தற்போது இறுகப்பற்று என்கிற படத்தை தயாரித்துள்ளது.
வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, விதார்த் ஸ்ரீ சாரதா ஸ்ரீநாத் அபர்னதி சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் வரும் அக்டோபர் ஆறாம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் விக்ரம் பிரபு கூறும்போது, “தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு உங்களுக்கென ஒரு ஸ்பெஷல் கேரக்டர் இருக்கிறது என்று அழைத்தார். அவரே அப்படி கூப்பிடும்போது நிச்சயமாக இந்த படத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது என ஒப்புக் கொண்டேன்” என்று கூறினார்.
இந்த படத்தில் விதார்த் ஜோடியாக நடித்துள்ள அபர்ணதி இந்த படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்து நடித்து மிகப்பெரிய அளவில் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை கொடுத்துள்ளார்.
இந்த படம் பார்த்துவிட்டு வெளியே வரும் தம்பதிகள் நிச்சயம் தங்களுக்குள் உள்ள ஈகோ மனப்பான்மையை கைவிட்டு புதிதான ஒரு வாழ்க்கையை வாழ தயார் ஆவார்கள் என்பது மட்டும் நிச்சயம் என கூறினார் இயக்குனர் யுவராஜ் தயாளன்.