V4UMEDIA
HomeNewsKollywoodதயாரிப்பாளராக மாறிய பிரபல சின்னத்திரை நடிகை நீலிமா இசை

தயாரிப்பாளராக மாறிய பிரபல சின்னத்திரை நடிகை நீலிமா இசை

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நீலிமா இசை. பெரிய திரையிலும் திமிரு உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் நீலிமா இசை.

நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகிறது.

இது குறித்து நீலிமா இசை கூறும் போது இந்தத் திரைப்படம் மைக்ரோ பட்ஜெட்டில் உருவானது. ‘அரண்மனைக்கிளி’ எனும் தொலைக்காட்சி தொடரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் மூலமாக ஷார்ட் ஃபிளிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பரணிதரன் மற்றும் செந்தில்குமார் அறிமுகமானார்கள். ஷார்ட் ஃபிலிக்ஸ் எனும் ஆப்ஸை ஏன் அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால், இந்த செயலியில் புது முகங்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள்.

புது இயக்குநர்கள், புதிய நடிகர்கள், புதிய தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமானவருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். இந்த மேடையில் அமைந்திருக்கும் பெரும்பாலானவர்கள் புது முகங்களே. இந்த செயலியை நாம் எப்போது வேண்டுமானாலும்… எங்கு வேண்டுமானாலும்.. பதிவிறக்கம் செய்து நாம் விரும்பக்கூடிய கால அளவுகளில் படைப்புகளை காணலாம்.

அனைத்து ஜானரிலும் படங்களை உருவாக்க வேண்டும் என அவர்கள் விரும்பிய போது, ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ தொடங்கியது. இந்த கதையை படமாக உருவாக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த போது, என்னுடைய கணவர் இசை, ‘அவசியம் உருவாக்க வேண்டும். ஏனெனில் தற்போது இந்த சமூகம் மற்றும் சமுதாயம் செல்லும் பாதையில் இது போன்ற உள்ளடக்கங்கள் அவசியம் என்றார். எங்களுடைய தயாரிப்பு நிறுவனம், குறைந்த முதலீட்டில் தரமான படைப்புகளை உருவாக்க முடியும் என்ற இலக்கை கொண்டது..‌ இது போன்ற நல்ல படைப்பிற்கு ரசிகர்களும் பேராதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

Most Popular

Recent Comments