தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் கேப்டன் மில்லர். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் நடிகர்கள் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், சுனில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் விதமாக இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
வரும் டிசம்பர் 15ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை பிரபல லைக்கா நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளது என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.