Home News Kollywood விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க விரும்பும் ஜெயம் ரவி

விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க விரும்பும் ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது இறைவன் என்கிற படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அஹமது இயக்கியுள்ளார். கதாநாயகியாக நயன்தாரா, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் பிரி ரிலீஸ் சென்னையில் உள்ள ஹோட்டல் லீலா பேலஸில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஜய்சேதுபதி, லோகேஷ் கனகராஜ், ஹெச்.வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி பேசும்போது, “இறைவன் என்றாலே அன்புதான். எதுக்கு இந்தப் பெயர் வைத்தீர்கள் என என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள். இந்தத் தலைப்பை இயக்குநர் சொன்ன போது, ‘இன்னுமா யாரும் இந்த தலைப்பை வைக்கவில்லை?’ என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்பை கொடுக்கும் இறைவனை ஏன் தலைப்பாக வைக்கவில்லை என்று தோன்றியது. இந்த அன்பில்தான் படம் தொடங்கியது.

கோவிட் காரணமாக ‘ஜனகனமண’ நின்றது. அதன் பின்புதான் ‘இறைவன்’ தொடங்கியது. நான் பார்த்த முதல் நடிகன் ரவிதான் என விஜய் சேதுபதி சொன்னார். ஆனால், நான் இயக்க வேண்டும் என நினைத்த முதல் ஹீரோ விஜய்சேதுபதிதான். சீக்கிரம் எனக்கு கால்ஷீட் கொடுங்கள்”. கேட்டார்