கடந்த செப்டம்பர் 7ம் தேதி பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியானது. தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வந்த இயக்குனர் அட்லீ இந்த படத்தை இயக்கியதன் மூலம் பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்துள்ளார்.

இந்த படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகி பாபு என முக்கியமான கலைஞர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளதன் மூலம் மூலம் முதன்முறையாக தானும் பாலிவுட்டில் நுழைந்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

இந்த நிலையில் தற்போது இந்த படம் உலகெங்கிலும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது அது மட்டுமல்ல இந்தியிலும் 504 கோடி ரூபாய் வசூலித்து இதுவரை இந்தியிலேயே வெளியான படங்களில் அதிகபட்ச வசூல் சாதனை படைத்த படம் என்கிற பெருமையும் பெற்றுள்ளது.