இயக்குனர் கௌதம் மேனன் தற்போது பிசியான முழுமையான நடிகராக மாறிவிட்டார். ஆனாலும் அவரது டைரக்சனில் பல நடிகர்கள் இப்போதும் நடிக்க தயாராகவே இருக்கின்றனர். மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்புவதற்கு முன்பாக ஏற்கனவே விக்ரமை வைத்து தான் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்யும் பணியில் தற்போது தீவிரம் காட்டி வருகிறார் கௌதம் மேனன். இந்த படத்தில் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விரைவில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடித்த நிலையில் சமீபத்தில் சென்சார் அதிகாரிகளுக்கு தணிக்கை சான்றிதழுக்காக இந்த படம் திரையிட்டு காட்டப்பட்டது.
படத்தைப் பார்த்து அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.