ஜெயம் ரவி நடித்த கோமாளி என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்தை வெற்றி படமாக கொடுத்த அவர், தனது இரண்டாவது படமாக லவ் டுடே என்கிற படத்தை இயக்கியதோடு தானே அதில் கதாநாயகனாகவும் நடித்தார்.
மிகப் பிரபல நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இவர் எப்படி ஹீரோ ஆனார் என ஆச்சரியப்பட்ட அனைவரையும் லவ் டுடே படத்தின் வெற்றி மற்றும் அதற்கு கிடைத்த வசூல் மூலம் வாய்பிளக்க வைத்தார் பிரதீப் ரங்கநாதன்.

கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் அந்த படம் வசூலித்ததால் பிரதீப் ரங்கநாதன் அடுத்து யாருடைய படத்தை இயக்கப் போகிறார், அல்லது யாருடைய படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார், அல்லது லவ் டுடே போல இரண்டு வேலைகளையும் அவர் ஒருவரே செய்ய இருக்கிறாரா என்கிற கேள்விகள் ரசிகர்களிடம் ஓடிக்கொண்டிருந்தன.
இதற்கிடையே அவர் விக்னேஷ் சிவன் டைரக்சனில் நடிக்க இருக்கிறார் என்கிற ஒரு யூகமான செய்தியும் சோசியல் மீடியாவில் ஓடிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக விக்னேஷ் சிவன் டைரக்சனில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார் என்கிற தகவல் ஒரு புரோமோ வீடியோ மூலமாக இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

கவனித்துப் பார்த்தால் முதல் படத்தில் இயக்குனராகி வேறு ஒரு நடிகரை இயக்கினார் பிரதீப் ரங்கநாதன். அடுத்த படத்தில் தானே ஹீரோவாக மாறி தன்னை இயக்கினார். தற்போது மூன்றாவது படத்தில் டைரக்ஷனை ஒதுக்கிவிட்டு இன்னொருவருடைய இயக்கத்தில் ஹீரோவாக தன்னை மாற்றிக் கொண்ட பிரதீப் ரங்கநாதன் நிச்சியமாக பிழைக்க தெரிந்த மனிதர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.