சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்கிற இன்னிசை நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் செய்த குளறுபடிகள் காரணமாக மிகப்பெரிய அளவில் கண்டனங்களுக்கு ஆளானது. அதிக அளவில் டிக்கெட் விற்றது, சரியாக போக்குவரத்து வசதி, பார்க்கும் வசதி செய்யப்படாதது என பல காரணங்கள் இதற்காக சொல்லப்படுகின்றன.

இதற்கு தானே பொறுப்பேற்றுக் கொள்வதாக ஏ.ஆர் ரகுமான் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த விஷயத்தில் ஏ.ஆர் ரகுமான் மற்றும் விஜய் ஆண்டனி இருவரையும் இணைத்து உண்மைக்கு மாறாக தகவல்களை ஒரு யூட்யூப் சேனல் ஒன்றின் தொகுப்பாளர் பேசியிருந்தார்.

வழக்கமாக சாதாரண கிசுகிசு உள்ளிட்ட விஷயங்களை கண்டு கொள்ளாமல் கடந்து சென்று விடுவார் விஜய் ஆண்டனி. ஆனால் இதில் தன்னையும் ஏ.ஆர் ரகுமானையும் இணைத்து அவதூறு பரப்பி உள்ளதால் இதற்கான நடவடிக்கையில் இறக்கியுள்ளார். சம்பந்தப்பட்ட பெண் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளதாகவும் இதில் கிடைக்கும் தொகையை இசைத்துறையில் இருக்கும் நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக பயன்படுத்திக்கொள்ள கொடுத்து விடப் போகிறேன் என்றும் கூறியுள்ளார். இது சம்பந்தப்பட்ட பெண் தொகுப்பாளருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.