V4UMEDIA
HomeNewsKollywoodஜவான் வெற்றிவிழா மேடையில் நயன்தாராவின் அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடிய ஷாருக் கான்   

ஜவான் வெற்றிவிழா மேடையில் நயன்தாராவின் அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடிய ஷாருக் கான்   

தொடர்ந்து விஜய்யை வைத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீக்கு மிகப்பெரிய ஜாக்பாட் பரிசாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் அந்த படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்கி கொடுத்து விட்டார். தற்பொழுது வரை 600 கோடிக்கு மேல் வசூலித்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது ஜவான் திரைப்படம்.

இதை தொடர்ந்து ஜவான் படத்திற்காக வெற்றி விழா சந்திப்பை நடத்தினார்  ஷாருக்கான். இந்த நிகழ்வில் விஜய்சேதுபதி உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டாலும் படத்தின் நாயகியான நயன்தாரா இதில் கலந்து கொள்ளவில்லை.

காரணம்  செப்டம்பர் 15 நயன்தாராவின் அம்மாவான ஓமனா குரியனின்  பிறந்தநாள் என்பதால், அவர் அன்றைய தினம் முழுநாளும் தனது தாயுடன்  செலவிட ஒதுக்கி விட்டார்.

இந்த தகவலை  இந்த வெற்றி சந்திப்பில் பகிர்ந்து கொண்ட ஷாருக்கான் மேலும் நயன்தாராவின் தாய்க்காக ஒரு பிறந்தநாள் வாழ்த்து பாடலையும் பாடி  அசத்தினார்.

Most Popular

Recent Comments