V4UMEDIA
HomeNewsKollywoodசாதனை படமான மின்மினியின் பர்ஸ்ட் லுக் வெளியானது 

சாதனை படமான மின்மினியின் பர்ஸ்ட் லுக் வெளியானது 

பூவரசம் பீப்பி, ஏலே,  சில்லுக் கருப்பட்டி உள்ளிட்ட படங்களை இயக்கி  பிரபலமானவர் இயக்குனர் ஹலிதா சமீம். தற்போது மின்மினி என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் என்ன ஆச்சரியம் என்ன சாதனை என்றால் இந்த படம் துவங்கப்பட்டது கடந்த 2015 ஆம் வருடத்தில். சிறுவர்களை மையப்படுத்தி  உருவாகியுள்ள இந்த படத்தில்  2015 ஆம் ஆண்டு சிறுவர்களாக நடித்தவர்கள்  அதன்பின் வளர்ந்து கல்லூரி செல்லும் பருவத்தில் அவர்களது வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை பற்றிய கதையாக உருவாகியுள்ளது.

பொதுவாக இதுபோன்ற படங்களில் குழந்தை பருவத்தில் நடிப்பதற்கு குழந்தை நட்சத்திரங்களையும் கல்லூரி படிவத்தில் நடிப்பதற்காக  இளம் நடிகர்களையும்  தனித்தனியாக பயன்படுத்துவார்கள். ஆனால்  இயக்குனர் ஹலிதா ஷமீம் ஒரு வித்தியாசமான முயற்சியாக 7 வருடங்களுக்கு முன்பு இந்த படத்தில் நடித்த  சிறுவர்கள் வளர்ந்து பெரியவர்களாக வரை காத்திருந்து மீண்டும் அவர்களை வைத்து இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.

அதனால் தான் இதை சாதனை படம் என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் படத்திற்கு  இசையமைப்பதன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் ஏ.ஆர் ரகுமான் மகள் கதீஜா. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது,

Most Popular

Recent Comments