ஜெயிலர் படத்தை தொடர்ந்து அதற்கு அடுத்ததாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படம் தான். காரணம் இங்கே தமிழில் தொடர்ந்து விஜய்யை வைத்து ஹிட் படங்களாக கொடுத்து வந்த இயக்குனர் அட்லீ முதன்முறையாக பாலிவுட்டில் நுழைந்து அங்கே உள்ளம் நம்பர் ஒன் ஹீரோவான ஷாருக்கானை வைத்து இயக்கியிருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இரு மடங்காக இருந்தது.
அது மட்டுமல்ல இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் அனிருத், காமெடியனாக யோகிபாபு என எல்லோரும் தமிழில் இருந்து பாலிவுட்டிற்கு சென்றிருப்பதால் தமிழ் ரசிகர்களிடையே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் கூடுதலாகவே இருந்தது,
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான இந்த படம் முதல் நாளன்றே மிகவும் வெற்றி படமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது, படம் வெளியாகி நான்கு நாட்கள் கடந்த நிலையில் தற்போது 520 கோடி வசூலித்துள்ளது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகெங்கிலும் 500 கோடி வசூல் அதுவும் நான்கு நாட்களில் என்பது இதுவரை எந்த படமும் இந்திய சினிமாவில் படைக்காத சாதனை. ஜவான் இதே போன்ற ஓட்டத்தில் ஓடினால் ஆயிரம் கோடி என்கிற இலக்கை எளிதாக வெகு விரைவிலேயே தொட்டுவிடும் என்பது உறுதி.
இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படமும் ஆயிரம் கோடி வசூலை ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வசூலை இந்த படம் எத்தனை நாட்களுக்கு முன்னதாக முறியடிக்கும் என்பதுதான் இந்த படத்தின் சாதனையாக அமையும் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.