Home News Kollywood லால் சலாம் படத்திற்காக டப்பிங் பேச துவங்கிய சூப்பர் ஸ்டார்

லால் சலாம் படத்திற்காக டப்பிங் பேச துவங்கிய சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினியின்  மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  ஏற்கனவே 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது  லால் சலாம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சற்று நீட்டிக்கப்பட்ட சிறப்பு தோற்றத்தில் மொய்தீன் பாய் என்கிற  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்தது. கிரிக்கெட்டையும் அதன் பின்னணியில் உள்ள அரசியலையும் மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருக்கிறது.

தற்போது போஸ்ட் புரதச்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்திற்கான தனது காட்சிகளுக்கு டப்பிங் பேசும் பணியை துவங்கியுள்ளார்.

இது குறித்த தகவலை  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக  வெளிப்படுத்தி உள்ளார்.