நடிகர் விஷால் தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளன்று வழக்கம் போல தனது தேவி அறக்கட்டளை மூலமாக சில நலத்திட்டங்களை வழங்கினார். அதை தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் தற்போது தான் நடித்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படக்குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இன்னொரு பக்கம் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் செப்டம்பர் 15 இல் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இதற்கான வேலைகளையும் விஷால் ஜருராக முடுக்கி விட்டுள்ளார். விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.