பல வருடங்களுக்கு முன்பு ஒரு இயக்குனருக்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்த படங்களை அவர்கள் சிரமமான நிலையில் இருக்கும்போது கைதூக்கி விடும் இடமாக அதன் இரண்டாம் பாவத்தை எடுப்பதை பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் அவரது தம்பி ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படமும் தற்போது இரண்டாம் பாகத்திற்கு தயாராகி உள்ளது.

இது குறித்து அறிவிப்பை இயக்குனர் மோகன்ராஜ் ஒரு வீடியோவுடன் வெளியிட்டுள்ளார். தனி ஒருவன் படம் மோகன் ராஜாவின் திரையுலக பயணத்தில் மட்டுமல்ல ஜெயம் ரவியின் திரையுலக பயணத்திலும் முக்கியமான ஒரு படம்.

அதற்கு முன்பு வரை ரீமேக் படங்களாக இயக்கி வந்த மோகன்ராஜா அந்த படத்திற்கு ஒரிஜினல் ஆகவே கதை தயார் செய்தார். அந்த படத்தில் வெற்றியால் அதுவரை ஜெயம் ராஜா என்று அழைக்கப்பட்ட அவர் தன்னை மோகன் ராஜாவாக மாற்றிக் கொண்டார்.

ஆனால் அந்த வெற்றியை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய வேலைக்காரன் திரைப்படம் சரியாக போகாததால் அடுத்து அவர் படம் இயக்குவதற்கு மிகப்பெரிய இடைவெளி விழுந்தது. இந்த நிலையில் தற்போது தனி ஒருவன் 2 மூலம் எழுச்சியுடன் கிளம்பியுள்ளார் மோகன் ராஜா.

முதல் பாகத்தில் ஜெயம் ரவி வில்லன் யார் என தெரியாமல் அவரைத் தேடி இறுதியில் அவர் தான் அரவிந்தசாமி என கண்டுபிடிப்பார். அதேபோல இந்த இரண்டாம் பாகத்தில் வில்லனே ஜெயம் ரவியை தேடி வருவார் என்பதைப் போல இந்த கதையை உருவாக்கி உள்ளார் மோகன் ராஜா.