V4UMEDIA
HomeNewsKollywoodசந்தானம் பார்த்து வந்த வேலையை தன் கையில் எடுத்துக்கொண்ட தம்பி ராமையா

சந்தானம் பார்த்து வந்த வேலையை தன் கையில் எடுத்துக்கொண்ட தம்பி ராமையா

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த உற்சாகத்துடன் அவர் நடித்து அடுத்த ரிலீசுக்கு தயாராக உள்ள கிக் திரைப்படமும் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் என்பவர் இயக்கியுள்ளார். டிடி ரிட்டன்ஸ் கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக தான்யா ஹோப் மற்றும் ராகினி திவிவேதி நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் தம்பி ராமையா, கோவை சரளா, நடிகர் செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இனிமேல் இப்படித்தான் படத்தை தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் கைகோர்த்துள்ளார் தம்பி ராமையா.

சந்தானம் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தபோது பல ஹீரோக்களின் படங்களில் அவர்களுடன் இணைந்து பயணித்து கதையை நகர்த்திச் செல்லும் ஒரு கதாபாத்திரமாக நடித்து வந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தில் தம்பி ராமையாவும் முன்பு சந்தானம் செய்த அதே விஷயத்தை தற்போது ஹீரோவாக சந்தானத்திற்கு செய்யும் விதமாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக இந்த படத்தில் அவர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகராக நடித்துள்ளார்.

Most Popular

Recent Comments