V4UMEDIA
HomeNewsKollywoodபடை தலைவனாக மாறிய விஜயகாந்த் மகன்

படை தலைவனாக மாறிய விஜயகாந்த் மகன்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான சகாப்தம் என்கிற படம் மூலம் கதா நாயகன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். அடுத்ததாக மதுரை வீரன் என்கிற படத்திலும் நடித்தார். தற்போது சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படை தலைவன் என்கிற படத்தில் நடிக்கிறார் சண்முக பாண்டியன். வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய யூ அன்பு என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்

காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படம் “படை தலைவன்”. இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோவை கேப்டன் விஜயகாந்த் தனது பிறந்தநாள் தினமான இன்று வெளியிட்டார்,

இந்நிகழ்வின் போது திருமதி பிரேமலதா விஜயகாந்த், திரு விஜய பிரபாகரன், “படை தலைவன்” படத்தின் நாயகன் சண்முக பாண்டியன், இயக்குனர் U அன்பு மற்றும் படக்குழுவினர் உடனிருந்தனர்.

“படை தலைவன்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் “படை தலைவன்” படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

“வால்டர்” மற்றும் “ரேக்ளா” பட இயக்குநர் U அன்பு கதையில், “நட்பே துணை” இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை வசனத்தில், இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை, இப்படத்தில் பதிவு செய்யப்படவுள்ளது.

Most Popular

Recent Comments