சினிமாவைப் பொறுத்தவரை ஒரு இயக்குனருடன் சேர்ந்து பணியாற்றும்போது அவரது திறமையும் உழைப்பும் பிடித்து விட்டால் அடுத்ததாக மீண்டும் அவருடனே இணைந்து அடுத்த படத்திலும் நடிக்க ஹீரோக்கள் தயங்குவதில்லை.
சில பேர் தாங்கள் இணைந்து பணியாற்றிய படம் வெற்றி பெற்றதும் அடுத்ததாக தங்கள் கூட்டணியை அறிவிப்பார்கள். சில பேர் தாங்கள் கூட்டணி சேர்ந்த முதல் படம் வெளிவருவதற்கு முன்பாகவே நல்ல புரிதல் காரணமாக முதல் படத்தின் மீதான நம்பிக்கை காரணமாக அடுத்த படத்திலும் ஒன்றாக கைகோர்ப்பதை அறிவிப்பார்கள்.
அப்படித்தான் நடிகர் தனுஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்கிற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதம் இந்த படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர் பார் நிறுவனம் தான் தயாரிக்கிறது.