கடந்த 20 வருடங்களுக்கு முன்பு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். அதைத் தொடர்ந்து விஜய் உள்ளிட்ட சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்த சோனியா அகர்வால் கதையின் நாயகியாகவும் சில படங்களில் நடித்தார்.
அப்படி செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்த படம் தான் 7 ஜி ரெயின்போ காலனி. அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது அதே டைட்டில் வரும் விதமாக உருவாகி வரும் 7ஜி என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் சோனியா அகர்வால்.
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சித்தார்த் விபின், ரோஷன் பஷீர், சுப்ரமணியம் சிவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் மையப்படுத்திய ஹாரர் த்ரில்லர் படமாக இது உருவாகிறது.. அதேசமயம் இதுவரை வெளியான ஹாரர் படங்களின் பாணியில் இல்லாமல் ஒரு பீல்குட் படமாக இது இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.